Headlines News :
Pin It

Widgets

Home » » வசீகர ஆற்றலுடன் செயல்படும் மேஷ ராசிக்காரர்கள்! - 25-10-2012

வசீகர ஆற்றலுடன் செயல்படும் மேஷ ராசிக்காரர்கள்! - 25-10-2012

மேஷம்:
இன்று, நீங்கள் வசீகர ஆற்றலுடன் செயல்படுவீர்கள். துவங்கும் பணிகளில் நிதானமும், செயல்திறனும் அதிகரிக்கும். தொழில், வியாபராத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றவீர்கள். எதிர்பார்த்த படி உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். நண்பரின் முக்கிய தேவைக்கு சிறு அளவில் பணஉதவி செய்வீர்கள்.
ரிஷபம்:
இன்று, உங்கள் நண்பர் வியப்புடன் பார்க்கும் நிலை உண்டு. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்துவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் இலக்குகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் பாராட்டு பெறுவர்.
மிதுனம்:
இன்று, எதிர்வரும் அவசரப்பணிகள் அல்லல் தரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் விரக்திமனப்பாங்குடன் பேகூடாது. தொழில், வியாபார இலக்கு நிறைவேற நண்பர்களின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு உண்டு. முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்க வேண்டாம். உத்தியாகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால் திட்ட இலக்கு நிறைவேறும்.
கடகம்:
இன்று, உங்கள் உடல் சோர்வினால் செயல்களில் தாமதம் இருக்கும். முக்கியமான பணிகளை பிறரிடம் தரக்கூடாது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிடுகிற குளறுபடியை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான அணுகுமுறை அவசியம். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால் உடல் நல ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். போக்குவரத்தில் கவனநடை உள்ளது.
சிம்மம்:
இன்று, உங்கள் மனதில் உண்மையின் மீதான நம்பிக்கை வளரும். நண்பரின் உதவி கிடைத்து மகிழ்ச்சி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கன்னி:
இன்று, உங்கள் சொல்லும், செயலும் சிறப்பு பெற இஷட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். முக்கிய பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்மறை சூழ்நிலை சரியாகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகள், எதிர்ப்புக்களை சரிசெய்து திட்டங்களை நிறைவேற்றுவர்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில இனம்புரியாத கவலை ஏற்படலாம். செயல்களில் தாமதமாகும் குளறுபடியும் இருக்கும். தொழில் வியாபாரம் சீர்பெற சக தொழில் நண்பர்களின் உதவி உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் பழைய விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்யவேண்டாம். விற்பனையாளரின் பகட்டான பேச்சை கேட்டு விலை குறைந்த பொருளை அதிகவிலைக்க வாங்குவதை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
இன்று, உங்கள் மனக்குறையை உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுவீர்கள். அதிகப்படியாக பேசி அதிருப்திக்கு உட்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சராசரி நிலையைப் பெற கூடுதல் உழைப்பு உதவும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுவகை உண்ணக்கூடாது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.
தனுசு:
இன்று, உண்மை, நேர்மை குணங்களை அதிகம் பின் பற்றுவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பீடு உயரும். தொழில், வியாபாரம் வளர அனுகூல காரணி பலம் பெறும். பணவரவு திருப்திகரமாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.
மகரம்:
இன்று, உங்களிடம் பழகிறவர்வர்களின் சூழ்நிலைகளை அறிந்து பேசுவது நல்லது. இதனால் இரு தரப்பிலும் உள்ள நம்பிக்கைக்கு குறையேதும் வராமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தாராள பணவரவில் ஆடம்பரச்செலவுகளை செய்வீர்கள். சத்தான உணவு வகை உண்பதால் உடல் நல ஆரோக்கியம் சீராகும். தொழிற்சாலை எந்திர பணியில் உள்ளவர்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கூடுதல் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.
கும்பம்:
இன்று, உங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். தன்னை சார்ந்தவர்களின் முக்கிய தேவைகளுக்கு உதவுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாபவிகிதம் அதிகரிக்கும். உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மீனம்:
இன்று, முரண்பட்ட மனிதர்களை சந்திக்கும் நிலை ஏற்படும். பொறுமையுடன் பேசுவதால் வீண்வாக்குவாதம் தவிர்க்கலாம். தொழில், வியாபார நிலை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். இல்லறத்துணை சேமிப்பு பணத்தை தந்து உதவுவர். உத்தியோகஸ்தர் பணியாளர்களின் கோரிக்கையை இயன்ற அளவில் நிறைவேற்றுவதால் உற்பத்தி இலக்கு சீராகும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved