பனை என்றாலே கிளை இல்லாத தாவரம் என்றுதான் நாம் நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் இந்நம்பிக்கையை பொய்ப்பிக்கின்ற வகையில் அரிதாக சில பனைகளை காண முடிந்து இருக்கின்றது. இவ்வகைப் பனைகளை கிளைப் பனைகள் என்று சொல்வார்கள்.
இந்த அரிய பனைகளும் இரண்டு, மூன்று கிளைகளைத்தான் பெரும்பாலும் பெற்று இருக்கும்.
ஆனால், இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் உள்ள விளாவெட்டுவான் கிராமத்தில் இருக்கின்ற ராஜா விளையாட்டு மைதானத்தில் 25 கிளைகள் கொண்ட அதிசய பனை மரம் ஒன்று உள்ளது.
சுமார் 50 வருடங்களுக்கு முன் சிறிய நாற்றாக இது நாட்டப்பட்டு இருக்கின்றது.
இதை நாட்டிய பெரியவர் இன்றும் உயிரோடுதான் உள்ளார்.
இப்பனையின் பழங்கள் சாதாரண பனம்பழங்களைக் காட்டிலும் மிகவும் சுவையானவை. சீனி போன்று இனிப்புச் சுவை உடையவை. இதனால் சீனிப் பனை என்றும் இப்பனை கிராம மக்களால் அழைக்கப்படுகின்றது.
இப்பனையின் கீழ் ஏராளமான பழங்கள் விழத்தான் செய்து இருக்கின்றன. ஆயினும் இவற்றின் கொட்டையில் இருந்து இன்னொரு மரம் இது வரை காலத்துக்கும் உருவாகவே இல்லை.

இதே போல் மட்டு மாவட்டத்தின் பல கிராமங்களில் இவ்வாறான பனைமரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !