Headlines News :
Pin It

Widgets

Home » » தாராள பணவரவு மேஷ ராசிக்காரர்களுக்கு! - 29-10-2012

தாராள பணவரவு மேஷ ராசிக்காரர்களுக்கு! - 29-10-2012

மேஷம்:
இன்று, நீங்கள் உண்மை, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். நண்பர், உறவினர் உரிய மரியாதை தருவர். தொழில் , வியபாரம் வளர்ச்சிபெற அனுகூலகாரணி பலம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத்தேவைகளை நிறைவேற்றவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

ரிஷபம்:
இன்று, சில அவசரப்பணி உருவாகி அன்றாட பணியை தாமதப்படுத்தும், நம்பகத்தன்மை இல்லாதவர்களிடம் ரகசியம் சொல்லவேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை கூடுதல் உழைப்பினால் பாதுகாப்பது நல்லது. பணவரவு சீராக இருக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும்.

மிதுனம்:
இன்று, நீங்கள் துவங்குகிற செயலை மனப்பூர்வமாக நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் தம்மால் இயன்ற உதவி வழங்குவர், தொழில் வியாபாரத்தை தொடர்பு பலம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும், இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் பணியாளர்களை ஊக்கப்படுத்தி திட்ட இலக்கை நிறைவேற்றுவர்.

கடகம்:
இன்று, உங்கள் மனதில் தன்னம்பிக்கையும், செயலில் உத்வேகமும் பெறுவீர்கள். இதனால் துவங்குகிற நற்காரியம் அத்தனையும் முழுபலனைத்தரும். தொழில், வியாபாரம் செழித்து வியத்தகு முன்னேற்றம் அடைவீர்கள், உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் சந்திக்க நினைத்த நண்பரை காணும் வாய்ப்பு உருவாகும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு தகுந்த சன்மானம் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று, நீங்கள் நிறைவேற்ற வேண்டிய செயலில் தாமதம் குறுக்கிடலாம். எதிர் மனப்பாங்கு உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க அதிக பணிபுரிவது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் சீர்முறைக்காக கூடுதல் பணம் தேவைப்படும்.உடல்நலத்திறக தகுந்த சிகிச்சை உதவும்.

கன்னி:
இன்று, நீங்கள் கூடுதல் பணிகளால் மனதில் அதிருப்தி அடைவீர்கள். குடும்ப நிலவரங்களை கவனத்தில் கொண்டு தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பணவரவு மிதமாக கிடைத்து சிக்கன செலவுக்கு பயன்படும். முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.

துலாம்:
இன்று, உங்கள் செயல்கள் சிறப்பு பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். நண்பர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபார அபிவிருத்தி பணி நல்ல விதமாக நிறைவேறும். உபரி பண வருமானம் பெறுவீர்கள். குடும்பத்தின் முக்கிய தேவையை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

இன்று, உங்கள் வாழ்வில் முக்கிய செயல்நிறைவேற இஷ்ட தெய்வ அருள் பலமாக துணை நிற்கும். சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில் வியாபாரம் அபிவிருத்தியாகி மனநிறைவைத் தரும். ஆதாய பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த சிரமம் விலகும்.

தனுசு:

இன்று, தெய்வநம்பிக்கையின் பெயரால் ஒருவர் உங்களிடம் உதவி கேட்பார். அவரது செயலின் உண்மை தன்மை உணர்ந்து உதவுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கடின உழைப்பு அவசியம். பணவரவை விட புதிய இனங்களில் செலவுத்தொகை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை குணத்துடன் நடந்து கொள்வது நன்மை பெற உதவும். மாணவர்கள், சாகச செயல்களில் ஈடுபடக்கூடாது.

மகரம்:

இன்று, நீங்கள் வெகுவாக எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். மனதில் அதிக நம்பிக்கை கொள்வதால் துவங்கும் செயல் திருப்திகரமாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் வரவால் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு பெறுவீர்கள். சேமிப்பு, பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

கும்பம்:
இன்று, நீங்கள் திட்டமிட்ட காரியம் எளிதாக நிறைவேறும். இஷ்ட தெய்வத்திற்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

மீனம்:

இன்று, உங்களின் மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். நண்பர்களிடம் பேசுவதில்நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருக்க அனுகூலம் பாதுகாக்க கூடுதல் உழைப்பு உதவும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை ஊக்கம் தரும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved