நன்கு வளர்ச்சியடைந்த நிலையிலிருந்த 90 புழுக்களை ஆறு வயதுச் சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சிறுவனின் பிரச்சினையை சரியாகக் கண்டறிந்து சரியான நேரத்தில் சத்திர சிகிச்சை செய்து சிறுவனைக் காப்பாற்றிய வைத்தியரை பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.
இச் சம்பவம் பற்றித் தெரியவருவது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வயிற்று வலி என்று ஆறு வயதுச் சிறுவன் ஒருவரை அவரது பெற்றோர் அழைத்து வந்துள்ளனர்.
சிறுவனர் வயிற்றுவலிக்கான கண்டறிவதற்காக வயிறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் போது சிறுவனின் வயிற்றில் வளர்ச்சியடைந்த நிலையில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட வைத்தியர்கள் சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தினர். இதன் போது சிறுவனின் வயிற்றிலிருந்து 90 வளர்ச்சியடைந்த புழுக்கள் வெளியேற்றப்பட்டன.
அப்புழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி இரண்டு சென்றி மீற்றகள் நீளமுடையதாகக் காணப்பட்டது.
சிறுவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணர் ஜெமில் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தகுந்த நேரத்தில் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு
வந்தபடியால் தான், சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !