Headlines News :
Pin It

Widgets

Home » » அனுஷ்கா, கிரிஷ் உறவு டமால்... காரணம் நயன்தாராவா, ஆர்யாவா?

அனுஷ்கா, கிரிஷ் உறவு டமால்... காரணம் நயன்தாராவா, ஆர்யாவா?

யோகா டீச்சர்' அனுஷ்காவிற்கும் தெலுங்கு இயக்குநர் கிரிஷுக்கும் இடையிலான காதல் புட்டுக் கொண்டு விட்டதாம். இதற்குக் காரணம் நயனதாரா மற்றும் ஆர்யா என்று சூடான பேச்சு அடிபடுகிறது.

இந்த கிரிஷ் வேறு யாருமல்ல வானம் படத்தை இயக்கியவர்தான். அதில் கிரிஷ் கேட்டுக் கொண்டதால்தான் விலைமாது கேரக்டரில் நடித்துக் கலக்கினார் அனுஷ்கா. இவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு கல்யாணப் பேச்சு வரை வந்து விட்டதாம். விரைவில் டும்டும்தான் என்றும் தெலுங்குத் திரையுலகில் பேசி வந்தனர்.

இந்த நிலையில்தான் திடீரென இவர்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாம். அனுஷ்கா இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பிஸியாக இருக்கிறார். ஜார்ஜியாவில் இரண்டாம் உலகம் சூட்டிங் முடித்துவிட்டு காதலர் கிரிஷை ஆசையாய் பார்க்கபோன இடத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். கிரிஷ் இப்போது ராணா, நயன்தாராவை வைத்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அனுஷ்காவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

கிரிஷ் திடீரென இப்படி பாராமுகம் காட்டுதவற்குக் காரணம் நயனதாரா என்கிறார்கள். கிரிஷுக்கும், நயனதாராவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். இதனால்தான் அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லையாம் கிரிஷ்.

அதேசமயம், ஜார்ஜியா போன இடத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா நெருக்கமாகி விட்டதால்தான் கிரிஷ் அப்செட்டாகி விட்டதாக இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஜார்ஜியாவையே சுற்றித் தீர்த்து விட்டதாகவும் கிரிஷுக்கு அவரது நலம் விரும்பிகள் போட்டுக் கொடுத்து விட்டனராம்.



அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன உறவுதான் உள்ளது என்று சிலர் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றனர். அது குறித்துக் கேட்டால், ஆர்யா, அனுஷ்கா இடையே என்ன நட்போ அதேதான் கிரிஷ், நயனதாராவுக்கும் என்று ரொம்பத் தெளிவாக குழப்புகிறார்கள்.

வில்லு படப்பிடிப்பு சமயத்தில்தான் பிரபுதேவாவுடன் நெருங்கினார், நெருக்கம், காட்டினார், காதலிலும் வீழ்த்தினார் நயனதாரா. தற்போது அது கிரிஷ் விவகாரத்திலும் நடந்து விடுமோ என்று நிறையப் பேர் எதிர்பார்க்கிறார்களாம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved