தர்மபுரியில், திருமணத்திற்குப் பிறகும்
கல்லூரியில் படிக்கப் போன பெண், இன்னொருவருடன் திருமணம் செய்து கொண்டு
வீட்டை விட்டுப் போய் விட்டார். கணவர் போலீஸில் புகார் கொடுத்து விட்டு
புலம்பிக் கொண்டிருக்கிறார். இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள குள்ளத்திரம் பட்டி, இந்த ஊரை
சேர்ந்தவர் மாதையன். 32 வயதான இவர் பேரூராட்சி அலுவலகத்தில் நைட்
வாட்சமேனாக இருக்கிறார்.
இவருக்கும் முனியம்மாள் என்ற 26 வயதுப்
பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர். முனியம்மாள் பிஎஸ்சி படித்தவர்.
திருமணத்திற்குப் பின்னர் பிஎட் படிக்க விரும்பினார். இதையடுத்து
முனியமாமாளை ஆட்டுக்காரன்பட்டியில் ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டார்
மாதையன்.
வழக்கம் போல 11ம் தேதி கல்லூரிக்குப் போன முனியம்மாள்
மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து கல்லூரிக்குப் போய் விசாரித்துள்ளார்
மாதையன். அப்போது கல்லூரியிலிருந்து தனது சான்றிதழ்கள் அனைத்தையும்
திரும்பப் பெற்றுக் கொண்டு முனியம்மாள் போய் விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் மாதையன். போலீஸார் விசாரணையில்
குதித்தனர். மேலும் முனியம்மாள் ஏற்கனவே பிஎஸ்சி படித்த கிருஷ்ணகிரி அரசு
கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அக்கல்லூரியில் படித்து
வந்த கார்த்திக் என்பவரை முனியம்மாள் காதலித்த விவரம் தெரிய வந்தது.
கார்த்திக்கை காதலித்துக் கொண்டே மாதையனையும் கைப்பிடித்துள்ளார்
முனியம்மாள். திருமணத்திற்குப் பிறகும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி ஓசூர் முருகன் கோவிலில் வைத்துத்
திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அதை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு
செய்துள்ளனர்.
இப்படி அடுத்தடுத்து 2 திருமணங்களை முடித்த
முனியம்மாள், தற்போது கார்த்திக்குடன் கிளம்பிப் போய் விட்டார். மேலும்
ஓசூரில் தனிக் குடித்தனத்தையும் தொடங்கியுள்ளனர். இது குறித்துத் தெரிய
வந்ததும் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர். இருவரையும் கைது
செய்த போலீஸார் கார்த்திக்கை கிருஷ்ணகிரி சிறையிலும், முனியம்மாளை சேலம்
காப்பகத்திலும் அடைத்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !