நாகப்பாம்மை தன்னுடன் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது
செய்யப்பட்ட யுவதி தொடர்பில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு களியாட்ட ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த யுவதி கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் தாம் குற்றமற்றவர் என்றும் தெஹிவளை மிருக காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த பாம்பை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திலனி என்ற நிரோசா விமலரட்ன என்ற குறித்த யுவதி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், பொலிஸார் குறித்த யுவதி தொடர்பில் ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற போது நீதிவான் பொலிஸாருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினார்.
ஏற்கனவே நேற்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் பொலிஸார் நேற்று அதனை தாக்கல் செய்யவில்லை.





0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !