கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் காட்டு பகுதியில் கடந்த மாதம் 22ம் மாடம்பாக்கம் மகான் பாபா தெருவை சேர்ந்த ராஜாமணியின் மனைவி மாரி (40), மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை போலீசார் மீட்டனர்.
கடந்த 14ம் தேதி தைலாவரம் வள்ளலார் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த வேதபுரி என்பவரின் மனைவி பூ விற்கும் சகுந்தலா (55), கூடுவாஞ்சேரி ரயில் தண்டவாளம் அருகே மழைநீர் கால்வாயில் அலங்கோலமான நிலையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த 2 பெண்களையும் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைகள் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ.க்கள் சித்ரா தேவி, லூர்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் தங்கியுள்ள வடமாநில வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே நேற்று சுற்றி திரிந்த பீகார் பாட்னாவை சேர்ந்த ஜிக்கந்தர் (30) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்தான் 2 கொலைகளையும் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வடமாநில வாலிபர் ஜிக்கந்தர் கோயம்பேடு இரும்பு கடையில் வேலை பார்த்துள்ளார். பின்னர் கூடுவாஞ்சேரிக்கு கட்டிட வேலை பார்க்க வந்துள்ளார்.
இவருக்கு போதை பழக்கம் உள்ளது. வேலைக்கு போக பிடிக்கவில்லை. செலவுக்காக பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கூடுவாஞ்சேரி ரயில் நிலைய நடைமேடையில் இரவில் தூங்குவார். பகல் நேரங்களில் தைலாவரம் காட்டு பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.
அந்த வழியாக தனியாக வரும் பெண்களை உல்லாசத்துக்கு அழைப்பது, வழிப்பறியில் ஈடுபடுவது, பெண்களிடம் சில்மிஷம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சகுந்தலா, மாரி ஆகியோரின் கழுத்தில் துண்டு போட்டு நெரித்து கொலை செய்து பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி மோகனா (53) என்பவர் மண்ணெண்ணை வாங்கி கொண்டு தனியாக வீட்டுக்கு நடந்து போகும் போது ஜிக்கந்தர் வழிமறித்து அவரை பலாத்காரம் செய்து எரிக்க முயன்றுள்ளார்.
மோகனா அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இதேபோல் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. ஜிக்கந்தரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !