இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2012-13ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள்
ஒப்பந்தத்தில் இளம் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் ஏ கிரேடு பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவ வீரரான ஹர்பஜன் சிங், பி கிரேடு பட்டியிலுக்கு
பின்தங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ)
ஆண்டுதோறும் வீரர்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கிறது. இதில் வீரர்களின்
ஆடும் திறனை பொறுத்து 3 கிரேடுகளில் பிரிக்கப்படுகின்றனர். இதன்
அடிப்படையில் வீரர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது. ஏ கிரேடு
வீரர்களுக்கு ரூ.1 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும், சி
கிரேடு வீரர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்
இன்று வெளியான 2012-13ம் ஆண்டிற்கான ஒப்பந்தத்தில் வீரர்களின் கிரேடு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்மின்றி நீண்டகாலமாக இந்திய அணியில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது
பி கிரேடு வீரராக மாறியுள்ளார். அவருக்கு பதிலாக இளம்வீரர் அஸ்வின், ஏ
கிரேடு வீரராக உயர்த்தப்பட்டுள்ளார்.
2012-13ம் ஆண்டிற்கான புதிய
வீரர்களின் ஒப்பந்தத்தில், ஏ கிரேடில் 9 வீரர்களும், பி கிரேடில் 8
வீரர்களும், சி கிரேடில் 20 வீரர்களும் என்று மொத்தம் 37 வீரர்கள் இடம்
பெற்றுள்ளனர்.
ஏ கிரேடு வீரர்கள்:
சச்சின், டோணி, ஜாகிர்கான், ஷேவாக், கம்பிர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, அஸ்வின்
பி கிரேடு வீரர்கள்:
ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யன் ஓஜா, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்
சி கிரேடு வீரர்கள்:
ரவிந்திர
ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாப் பட்டேல், அபிமன்யூ மித்துன்,
முரளி விஜய், ஷிகார் தவான், விரிதிமன் சகா, பார்த்திவ் பட்டேல், மனோஜ்
திவாரி, பத்ரிநாத், பியூஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, வருண்
ஆரோன், அபினவ் முகுந்த், அசோக் டின்டா, யூசுப் பதான், பிரவீன் குமார்,
பாலாஜி.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !