கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இன்று மாலை கலகம் மூண்டு உள்ளது.
விசேட அதிரடிப் படையினர் இச்சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் கைதிகளுக்கு கோபம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. பின் கலவரமாக மாறியது.
கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆயினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
சிறைச்சாலையின் ஆயுத களஞ்சியசாலையை உடைத்து கைதிகள் ஆயுதங்களை கைப்பற்றினர்.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அத்துடன் கற்கள், கையில் அகப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கொண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கலவரத்தில் 12 பேர் பலி 35 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்
சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் படுகாயம்
மோதலில் ஐவர் கொல்லப்பட்டமையுடன், விசேட அதிரடிப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். சீ. ரனவன உட்பட 13 பேர் வரை காயம் அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கைதிகள் கற்களையும் ஏனைய பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரனவன சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
வெலிக்கடைப் பிரதேசத்தில் ஒரே பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
பேஸ் லைன் வீதியின் பொரளை முதல் தெமட்டக்கொட வரையிலான வீதியின் போக்குவரத்து தடை
வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பேஸ் லைன் வீதியின் பொரளை முதல் தெமட்டக்கொட வரையிலான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
சிறைசாலைக்குள் இருக்கும் கைதிகள் வீதியை நோக்கி கல்வீச்சு தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்திலேயே இந்தப்பாதை மூடப்பட்டுள்ளது.
கைதிகள் தப்பியோட்டம்
இந்த மோதல் சம்பவம் பாரிய கலகமாக வெடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடைச் சிறைச்சாலையை அண்டிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சில கைதிகள் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சோதனையால் கோபமடைந்த கைதிகள் தாக்குதல்: களஞ்சிய அறையிலிருந்த துப்பாக்கிகள் கைதிகளிடம்
சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு விட்டு விசேட அதிரடிப் படையினர் திரும்பும் போது கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதும் சிறைச்சாலையில் தற்போதும் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய கள நிலைமைகள்
சிறைச்சாலையின் ஒரு பகுதி கைதிகளின் கட்டுபாட்டுக்குள் இருப்பதாகவும் மேலும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாகவும் படையினரின் கவசவாகனங்கள் சிறைச்சாலையை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்கள் வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு கவச வாகனங்கள் பலவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தப்பிச் செல்ல முற்பட்ட கைதியொருவர் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தற்போது இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு சிறைச்சாலையை சுற்றி கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதுடன் கனரக ஆயுதங்களுடன் இராணுவத்தினர் சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கி வேட்டுக்கள் இடம்பெறுவதோடு இராணுவத்தினர் சிறைச்சாலையை உடைத்து உள் நுழைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அப்பகுதியில் கடும் மழை பெய்துகொண்டிருப்பதால் சிறைச்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !