தமக்கு பிடித்த நடிகருக்காக பாலாபிஷேகம் செய்வது வழக்கம், விஜய் ரசிகர்கள் ஒரு படி மேல போய் இரத்த அபிஷேகம் செய்யவும் துணிந்துவிட்டனர். ஏன் இந்த இரத்த வெறி??
எல்லா ரசிகர்களுமில்லை சிலர் மட்டும், இவ்வாறு முட்டாள் தனமாக செயற்படுவது ஒட்டுமொத்த ரசிகர்களின் பெயரையல்லவா கெடுக்கிறது.
நீங்க சிந்தும் ரத்தமும், அதால உங்க உசுரே போனாலும் தலைவனுக்கு தெரியவா போகிறது? ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் இல்லாது போகும் இரத்தத்தை எதாவது இரத்த வங்கியில் கொடுத்து புண்ணியத்தை தேடிக்கொள்ளுங்கள்!!
படம் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் சில கோடிகள் நடித்த நடிகருக்கு நிச்சயம் கிடைக்கும். ரசிகர்கள் புறங்கையை நக்கி விட்டு அடுத்த படத்தைப் பற்றி ஆராய வேண்டியது தான்!!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !