விட்டா அந்த நடிகரை அண்ட்ராயரோட நிக்க வெச்சு எங்க எல்லாம் மச்சம் இருக்கு என மச்ச எண்ணிக்கை கணக்கெடுப்பை நடத்தினாலும் நடத்துவாங்க சிலர். யார் அந்த நடிகர்? ஏன் இப்படி ஒரு மச்சக் கணக்கெடுப்பு? விசாரித்துப் பார்த்த வரையில் இதற்கான பதிலாக, நம் காதுகளுக்கு எட்டியது கருணாசின் பெயர்தான்.
ஹீரோவின் நண்பன் அல்லது காமெடியான கேரக்டர்களில் மட்டுமே முகம் காட்டி வந்த கருணாஸ் பின்பு முழு நீள ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஒரு ஹிட் கொடுத்தால் தொடர்ந்து 10 தோல்விப் படங்களைக் கொடுத்தால் கூட மார்க்கெட் அப்படியே இருக்கும். கருணாசோ வெற்றிப் படம் கொடுத்தாரா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் இவரை வைத்து தொடர்ந்து படம் எடுத்து வருகிறார்கள்.
இவரது முதல் படத்தில் இருந்து இப்போதைய மச்சான், சந்தமாமா, ரகளைபுரம் படங்கள் வரைக்கும் இவருக்கு வந்து வாய்க்கிற ஜோடி நடிகைகள் எல்லாருமே செம டக்கராக இருக்கிறார்கள். சூப்பரான ஹீரோவுக்கு கூட அட்டு பிகரு ஜோடியாக நடிக்கும் போது கருணாசுக்கு போய் எப்படி இவ்வளவு அழகான நடிகைகள் ஜோடியாக சிக்குகிறார்கள் என்பதன் காரணம் தெரிவதற்காகத்தான் மச்சக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொன்னார்களாம் சிலர். ஒருவேளை அவருக்கு உடம்பெல்லாம் மச்சம் இருக்குமோ…!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !