இலங்கையில் சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கிய சாதனைக்கும், பெருமைக்கும் உரியவர் ஒரு தமிழர்.
இவர்தான் மகப் பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி வி. அருளானந்தராஜா.
இவரின் வழிகாட்டல், அறிவுறுத்தல், ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் கொழும்பு நியூ லங்கா வைத்தியசாலையில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி எட்டுப் பேர் கொண்ட வைத்திய நிபுணர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் இலங்கையில் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்டது.
கொழும்பு நியூ லங்கா வைத்தியசாலை இவருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்திய கலாநிதி அருளானந்தராஜா மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாறில் பிறந்து, பெரிய கல்லாறில் திருமணம் செய்து கொழும்பில் வசித்து வந்தவர்.
இவர் கடந்த 30 ஆம் திகதி கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 62 வயது.
இவரது நல்லடக்கம் கொழும்பு கனத்தை மயானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !