கடந்த 30ம் திகதி முதல் காணாமல் போயிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 30ம் திகதி தனது கொட்டாஞ்சேனை வீட்டில் இருந்து கொழும்பு செட்டியார்தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இது குறித்து அவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 31ம் திகதி நானுஓயா பங்களாவத்தையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என தெரியவந்ததை அடுத்து கொழும்பு கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி சடலமாக மீட்கப்பட்டவர் சின்னத்துறை இந்திரேஸ்வரன் (53 வயது) என அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !