Headlines News :
Pin It

Widgets

Home » » மிதுன ரசிக்காரருக்கு சந்தோசம் நிறைந்திருக்கும் நாள் 27-10-2012

மிதுன ரசிக்காரருக்கு சந்தோசம் நிறைந்திருக்கும் நாள் 27-10-2012

மேஷம்:
இன்று, உங்கள் செயல்களில் சிறு குளறுபடி ஏற்படலாம். பணிகளை சிறப்பாக நிறைவேற்ற குடும்ப உறுப்பினர்களின் கருத்து உதவும். தொழில், வியாபார இலக்கை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் கூடுதல் பணச்செலவு ஏற்படும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

ரிஷபம்:

இன்று, உங்கள் வாழ்வில் வளம்பெற கூடுதல் வாய்ப்பு வரும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு உரிய நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணம் கிடைக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:
இன்று, உங்கள்மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். உறவினர் சொல்லும் ஆலோசனையை மதித்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர அனுகூல காரணி பலம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

கடகம்:
இன்று, உங்கள் மனதில் சிறிது பதட்டம் ஏற்படலாம். நல்லவர்களின் வழிகாட்டுதல் பெறுவதால், செயல்கள் சீராக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர அதிகப்பணிபுரிவீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். விலை மதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது. உத்தியோகஸ்தர் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே, திட்ட இலக்கு நிறைவேறும்.

சிம்மம்:
இன்று, சிலரது பேச்சு உங்கள் எண்ணத்திலும், செயலிலும் மாறுபட்ட தன்மையை உருவாக்கும். சூழ்நிலைகளை அனுசரித்து செயல்படுவதால், நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை உண்டு. பணவரவு எதிர்பார்த்ததை விட சிறிதளவு குறையும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வீர்கள். சுற்றுச்சூழ்நிலைகளால் நித்திரை தாமதமாகும்.

கன்னி:
இன்று, எந்த செயலிலும், முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த நற்பலன் எளிதாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபிவிருத்தியாகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அதிகாரிகள், பணிகள் சிறந்து பாராட்டு பெறுவர்.

துலாம்:
இன்று, ஒருமுகத்தன்மையுடன் நீங்கள் செயல்படுவீர்கள். செயல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். கூடுதல் பணவரவில் சேமிப்பை உயர்த்துவீர்கள். குடும்ப உறுப்பினர் அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். மாணவர்கள், நன்றாக படித்து, பாராட்டு பெறுவர்.

விருச்சிகம்:
இன்று, நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வீண் பேச்சு பேசி, நேரத்தை கடத்துபவர்களிடம் விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப் பணம் வசூலிப்பதில் நிதான அணுகுமுறை நல்லது. உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல் நலம் சீராக இருக்கும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும்.

தனுசு:
இன்று, உங்களின் வெளிவட்டாரத் தொடர்பு சில தொந்தரவு தரலாம். திட்டமிட்டபணியை உரியவகையில் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். ஒவ்வாத அழகு சாதனப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.

மகரம்:
இன்று, உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். உங்களிடம் மாறுபட்ட கருத்து உள்ளவர்களுக்கும் உதவுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை அதிர்ஷ்டவசமாக பெறுவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

கும்பம்:
இன்று, உங்களை சுற்றி நடைபெறுகிற சம்பவங்கள், மனதை சங்கடப்படுத்தலாம். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தேவைக்கு தாராள பணச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

மீனம்:
இன்று, உங்கள் நண்பரின் அன்பு, உதவி கிடைத்து, மனம் நெகிழ்வீர்கள். செயல்களில் புதுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில், ஒருபகுதி செலுத்துவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved