அநுராதபுரத்தில் மூன்றரை வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடும் 25 ஆயிரம் ரூபா
அபராதமும் செலுத்துமாறு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த
குமார ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இழப்பீட்டை செலுத்த தவறும் பட்சத்தில் குறித்த நபருக்கு மேலும் ஒரு
வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாவிலாச்சிய, ஜேமடுவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !