இவ்வாறு விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளை இயக்கும் போது ஆரம்பத்தில் Startup ஒலி வரும்.
எனினும் இந்த ஒலியினால் அசௌகரியம் ஏற்படுவதாகக் கருதின் அதனை நிறுத்திவைக்கும் வசதியும் கூடவே தரப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த ஒலியினை நிறுத்துவற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாள்க.
1. முதலில் கணனியின் Desktop பகுதியில் Right-click செய்து தோன்றும் மெனுவில் Personalize என்பதனை தெரிவு செய்யவும்.
2. தொடர்ந்து தோன்றும் விண்டோவில் காணப்படும் Sounds இணைப்பினை அழுத்தவும்.
3.தோன்றும் புதிய விண்டோவில் தென்படும் Play Windows Startup sound என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான அடையாளம் தென்படும். அதனை நீக்கிவிட்டு Apply பொத்தானை அழுத்தவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !