இவற்றுள் பல அதிசயமானவை. சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவை. சில வேளைகளில் முட்டாள்தனமானவையாகவும் சிந்தனைக்கு படும்.
உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி பண்டிகை பற்றி தெரிந்து இருக்கும். இந்துக்கள் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் நவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியா பூராவும் நவராத்திரி ரொம்ப சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆனால் விடயம் என்னவென்றால் இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான வரணாசியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் 80 வயது உடைய பூசாரி ஒருவர் நவராத்திரியின் நாலாம் நாளில் ஒரு பேரதிசயத்தை வருடம் தோறும் நடத்தி வருகின்றார்.
ஒன்பது அடுப்புக்களில் தனித் தனி அண்டாக்களில் பால்கள் கொதிக்க வைக்கப்படுகின்றன. பால்கள் கொதித்தவுடன் ஒவ்வொன்றாக ஒவ்வொரு அண்டாவையும் கவிழ்த்து உடல் மேல் பாலை ஊற்றுகின்றார் பூசாரி.
ஆனால் இவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதாக இல்லை. இந்த அதிசயத்தை காண அண்டிய இடங்கள் பலவற்றில் இருந்தும் ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிகின்றமையும் வழக்கம்.
எல்லாம் பராசக்தியின் செயல் என்று பூசாரியும், பக்தர்களும் விசுவாசிக்கின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !