இன்றைய கலாச்சாரத்தில் டாட்டூஸ் வரைவது ஒரு பேஷன்
ஆகி விட்டது. இதனால் என்ன பாதிப்பு வரும் என்று யாரும் உணருவதில்லை. சிறுசு
முதல் பெருசுவரை தம் அழகை மேலும் கூட்டுவதற்காக உடலில் ஆங்காங்கே வண்ண
வண்ணமாக டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்திக் கொள்கின்றனர். சமீப கலமாக பச்சை
குத்திக்கொள்வதினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதென்று தோல்நோய்
மருத்துவர் ஒருவர் கூறுகின்றார்.
பல்வேறு வண்ணங்களில் பச்சைக் குத்தும் போது இவற்றில் சேர்க்கப்படும் இராசாயன பொருட்களால் பாக்டீரியாக்கள் அதிகம் தொற்றி, தோல் அரித்து, வீக்கம் ஏற்படுத்துகிறது. ஒருமுறை பச்சை குத்தினால் அதை நீக்க அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் தோல் வியாதி, ஹெபட்டிஸ் சி, அரிப்பு, போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதென்றும், பாக்டீரியாக்கள் சேர்ந்து அலர்ஜியை ஏற்படுத்தி சிலருக்கு தோல் உரியவும் செய்கின்றது என கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எனவே டாட்டூஸ் பிரியர்களே உபயோகிப்பதற்கு முன் பலமுறை யோசியுங்கள் என தோல் நோய் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பச்சைக் குத்திக் கொள்பவர்களுக்கு எளிதாக கிருமித் தொற்று ஏற்படும் என்ற ஒரே காரணத்தினால், இந்திய ராணுவத்தில் பச்சைக் குத்திக் கொண்ட இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !