தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள் விவேக்குமார் (22), சோனியா காந்தி (22). பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். கோவை கணபதி பகுதியில் வசிக்கின்றனர்.
இதை தெரிந்துகொண்டு சோனியாவின் அம்மா சந்திரா, அத்தை இந்திரா மற்றும் உறவினர்கள் நேற்று கோவை வந்தனர். இருவரையும் கண்டுபிடித்து தாக்கினர். கட்டாயப்படுத்தி காரில் ஏற்றினர்.
தேவக்கோட்டை நோக்கி கார் பறந்தது. தாராபுரம் அருகே சென்ற போது சாலையில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதை விவேக் பார்த்தார். டிரைவர் சீட் அருகே அமர்ந்திருந்த அவர் திடீரென ஸ்டியரிங்கை இழுத்தார்.
கார் நிலைதடுமாறி, சாலையோரம் நின்ற வேன் மீது மோதி நின்றது. தகவல் கிடைத்து வந்த போலீசாரிடம் கடத்தப்படும் தகவலை கூறி தப்பியது ஜோடி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !