மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் 16 வயது மகள் ராதா. இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார். டியூஷனுக்காக ராஜ்குமார் என்பவர் நடத்தி வந்த சென்டருக்குப் போய் வந்தார். ராஜ்குமாருக்கு 37 வயதாகிறது. மனைவி கலா, இரண்டு மகள்கள் உள்ளனர்.
டியூஷனுக்கு வந்த ராதாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது தவறான பழக்கமாக மாறி விட்டது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். இந்த நிலையில் அக்டோபர் 5ம் தேதி இருவரையும் காணவில்லை. இதையடுத்து ஜெயச்சந்திரன் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் விசாரணைக்காக ராஜ்குமாரின் மனைவி கலாவிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் செய்த காரியம், போலீஸார் நடத்திய விசாரணை ஆகியவற்றால் அதிர்ச்சி, அவமானம் அடைந்தார் கலா.
இனால் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு பரிதாபமாக இறந்து போனார். ஆசிரியர் ராஜ்குமாரின் செயலால் அவரது மனைவி உயிர் போய் விட்டது, இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சங்கரன்கோவில் பக்கம் தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரையும், ராதாவையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !