தமிழக மக்களை உலுக்கிய, கோவை பள்ளிக் குழந்தைகள் இருவர்
கொலை வழக்கில், மனோகரன் குற்றவாளி என மகளிர் கோர்ட் நீதிபதி சுப்ரமணியன்
அறிவித்தார்.
கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள
காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் -
சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள்,
"சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர்.
இக்குழந்தைகளை கால் டாக்சியில்
கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த
2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான்.
அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே
தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.
இந்த வழக்கில்
கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி,
வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக
கொண்டு சென்றனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை
போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர்
நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து,
தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இவ்வழக்கில் அரசு தரப்பில்
ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில்
வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை
வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை
வழங்க வேண்டும்.
குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை
வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை
செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை
வழங்கியுள்ளது' என்றார்.
மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும்
வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு
நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில்,
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு
கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார்.
அதற்கு தனக்கு
தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம்
மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார்.
அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து,
இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு
வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும்
நீதிபதி தெரிவித்தார்.
தினமலர்


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !