தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசை ஆதரிக்கும் தேமுதிக(ஜெ) அணி
எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கும் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தொடர் ஒரு வாரம் நடைபெற இருக்கிறது.
இன்றைய
கூட்டத்தில் துணை சபாநாயகர் தேர்தலில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமனைத்
தவிர வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார்.
இதனையடுத்து அவர் துணை சபாநாயகராக பதவியேற்றார்.
இதனிடையே
முதலமைச்சரை சந்தித்துப் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல்
ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன், தமிழழகன் ஆகியோர் ஒரே வரிசையில்
அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டது. அனைவரும் முதல் வரிசையில் அதிமுக
எம்.எல்.ஏக்களுடன் அமர வைக்கப்பட்டனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !