ஜப்பானிய நாட்டில் வருடாந்தம் இடம்பெறுகின்ற விசித்திர திருவிழாக்களில் ஒன்று நிர்வாண கொண்டாட்டம். இது A Hadaka Matsuri அல்லது matsuri என்று அழைக்கப்படுகின்றது.
இக்கொண்டாட்டத்தில் பங்குபற்றுபவர்கள் இயலுமான வரை மிக குறைந்த அளவில்தான் ஆடைகள் அணிந்து இருப்பர். பெரும்பாலும் அரைத் துண்டுதான் அணிந்து இருப்பர். இத்துண்டு fundoshi என்று சொல்லப்படுகின்றது. சில வேளைகளில் சிறிய happi coat அணிந்து இருப்பர். மிகவும் அரிதாக முழு நிர்வாணமாக தோன்றுவர். ஆயினும் இக்கொண்டாட்டம் ஆபாச திருவிழாவாக இங்கு பார்க்கப்பட மாட்டாது. அத்துடன் அணியப்படுகின்ற சிறிய ஆடைகள் புனித உடைகளாகவே கண்டு கொள்ளப்படும்.
எத்தனையோ நிர்வாண கொண்டாட்டங்கள் ஜப்பான் பூராவும் கோடை காலத்தில் அல்லது குளிர் காலத்தில் வருடாவருடம் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதி பிரபலமான நிர்வாண கொண்டாட்டம் Okayama என்கிற இடத்தில்தான் இடம்பெறுகின்றது. ஏனெனில் நிர்வாண கொண்டாட்டத்தின் தாயகம் இந்த இடம்தான்.
இக்கொண்டாட்டம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் 9000 இற்கும் அதிகமான ஆண்கள் இதில் பங்கேற்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனையும் சேர்ந்து இருக்கின்ற துரதிஷ்டங்கள், தீய சக்திகள் ஆகியன அம்மனிதனை விட்டு போக ஜப்பானியர்கள் கண்டிருக்கின்ற வழிதான் இத்திருவிழா.
ஏனைய மனிதர்களை நிர்வாண மனிதர்கள் தொட்டு துரதிஷ்டங்கள், தீய சக்திகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வர். பின் இவற்றை வெளியேற்றிக் கொள்வர்.

எனவே இப்பண்டிகையில் நிர்வாண மனிதராக தெரிவு செய்யப்படுகின்றமை பெரிய கௌரவம் ஆகும். இதில் பங்கேற்பவர் முன்னதாக விரிவான சுத்திகரிப்பு சடங்குகளை கட்டாயம் செய்ய வேண்டி இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள உரோமங்கள் முழுவதையும் அகற்றுதல் வேண்டும். பின் வீதிகள் முழுவதும் நிர்வாணமாக தோன்றுதல் வேண்டும்.
இவரை குறைந்தது 9000 பேர் பார்க்க வேண்டும். இம்மனிதர்கள் அரைத் துண்டு அணிந்து இருப்பர். இவரை தொடுவார்கள். இவரை முஷ்டி கொண்டு குத்துவார்கள். துரத்துவார்கள். இழுப்பார்கள். இவர் மயக்கம் அடைய நேரலாம். இடித்து நசுக்கப்படலாம்.
இவர் இறுதியாக வந்து சேர வேண்டிய இடத்தை அடைகின்றபோது இவரது உடலின் எந்த உறுப்புக்கள் அகப்படுகின்றனவோ அந்த உறுப்புக்களை சனம் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். பெரிய இழுபறியே நடக்கும். ஒரு மணித்தியாலத்துக்கு அதிகமாககூட இடம்பெறலாம்.
பின் நிர்வாண மனிதர் புனித தலத்துக்கு சென்று வழிபடுவார். இவர் பின்னர் ஆடை அணிந்து கொள்வார். பின் நகரத்தை விட்டு வெளியேற்றப்படுவார். இவர் வெளியேறுகின்றமையுடன் நகரத்தை விட்டு அனைத்து துரதிஷ்டங்கள், தீய சக்திகள் இவருடன் போகின்றன என்று கொள்ளப்படும்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !