பிலியந்தலையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர்,
ஆசிரியைகள் ஆகியோரின் அரை நிர்வாண புகைப்படங்களை பேஸ் புக்கில் பிரசுரித்து
அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அப்பாடசாலையின் பழைய மாணவனான 18 வயது
பையன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நீச்சல் தடாகம் ஒன்றில் அரை நிர்வாணமாக இவர்கள் ஒன்றாக காட்சி கொடுக்கின்றமை போல இப்புகைப்படம் இருந்தது.
இது உண்மையான புகைப்படம்தான் என்று இப்பாடசாலையோடு சம்பந்தப்பட்ட பலரும் எண்ணி இருந்தனர்.
ஆயினும் இது போட்டோ சொப் வித்தையை பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி என்பது பின்பு கண்டு பிடிக்கப்பட்டது.
இவர் இப்பாடசாலையின் மாணவனாக இருந்தபோது கனிஷ்ட மாணவி ஒருத்தியை காதலித்து இருக்கின்றார்.
ஆயினும் இவரது காதலுக்கு மேற்சொன்ன அதிபர், ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் பலத்த எதிர்ப்புக் காட்டினர்.
இதனால் இவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது. பழி வாங்க முடிவெடுத்தார். பாடசாலையை விட்டு வெளியேறினார். கணனி வகுப்புக்கு சென்று போட்டோ சொப் படித்தார்.

இவ்வித்தையை கையாண்டு அவதூறுப் புகைப்படத்தை சரிக் கட்டி பிரபல சமூக இணைப்புத் தளமான பேஸ் புக்கில் பிரசுரித்தார்.
பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டனர். இவரது வீட்டைக் கண்டு பிடித்து வந்து இவரது கம்பியூட்டரை கைப்பற்றினர். அத்துடன் போட்டோ சொப் வித்தைக்கு பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை கம்பியூட்டரில் கண்டு பிடித்தனர்.
இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நன்றி தாய்நாடு

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !