பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் அடங்கிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மல ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது தொடர்பான உறுதிமொழி வழங்கப்பட்டதாக ரஞ்சித் தேவசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளருடன், உயர் கல்வி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். நேற்றைய பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்திருந்தது எனச் சுட்டிக்காட்டிய தேவசிறி, பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினை உண்டு என்பதை நிதியமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற அரசாங்கத்தின் நடைமுறைகள் அடங்கிய கடிதம் இன்று எமக்கு வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. நண்பகலுக்கு முன்னர் இக்கடிதம் கிடைக்கும் என எதிர்பார்க்கின் றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இக்கடிதம் எமக்குக் கிடைத்ததும் ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கப்பட்ட விடயங்கள் மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கியிருக்கும் தீர்வு யோசனைகள் குறித்து எமது தொழிற்சங்கம் விரிவாக ஆராயும். அரசாங்கத்தின் இக்கடிதம் நாடளாவிய ரீதியிலுள்ள எமது ஏனைய தொழிற்சங்கங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இது குறித்து தாம் கூடி விரிவாக ஆராய்ந்து ஓரிரு தினங்களில் முடிவொன்றுக்கு வரவிருப்பதாகவும் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.
அரசாங்கம் முன்வைத்திருக்கும் ஒட்டுமொத்தமான தீர்வு யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தாம் கைவிடவிருப்ப தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினை குறித்து கடந்த சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இப் பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினை தவிர்ந்த ஏனைய பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பளப் பிரச்சினை குறித்து நிதியமைச்சின் செயலாளருக்கும், பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !