மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியின் பின்புறத்தில் இருந்து தமிழ் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆயித்தமலையில் நரிப்புல் தோட்டம் என்கிற இடத்தைச் சேர்ந்த 20 வயது யுவதியான சிங்கராசா ராதிகா என்பவரே இறந்து இருக்கின்றனர்.
இக்கட்டிடத் தொகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாரி ஒருவர் குடும்ப சமேதராக வசித்து வருகின்றார். இவ்வீட்டில்தான் பணிப்பெண்ணாக யுவதி வேலை பார்த்து வந்து இருக்கின்றார்.
ஆனால் இவர் கடந்த சனிக்கிழமை மாலை முதல் மர்மான முறையில் காணாமல் போய் இருந்தார்.
இவரை எஜமானர்கள் பல இடங்களிலும் தேடி வந்திருக்கின்றனர்.
இவ்வாறு தேடியபோதுதான் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உடனடியாகவே காத்தான்குடிப் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு விபரத்தை அறிவித்தார் அதிகாரி.
பொலிஸார், நீதிவான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர்.
சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த மட்டக்களப்பு நீதிவான் அப்துல்லா உத்தரவிட்டார்.
மரம் ஒன்றில் ஏறி வெட்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்தமையில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.










0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !