Headlines News :
Pin It

Widgets

Home » » மட்டு மாணவி சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் வென்று சாதனை!

மட்டு மாணவி சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் வென்று சாதனை!

மட்டக்களப்பு புனித சிலியா பெண்கள் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயில்கின்ற மாணவி ஜெயக்குமார் வைஷ்ணவி விஞ்ஞான பாடத்தில் சர்வதேச மட்டத்தில் வெங்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

அதியுயர் நுண்ணறிவு மட்ட மாணவர்களுக்காக ஆங்கில மொழி மூலம் சர்வதேச மட்டத்தில் நடத்தப்படுகின்ற போட்டிதான் சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி.


கடந்த 28.10.2012 முதல் 01.11.2012 வரை இந்தியாவில் (City Montessori Inter College, RDSO Campus, Manak Nagar, Lucknow, India) இப்போட்டி இம்முறை இடம்பெற்றது. இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தனர்.

இப்போட்டியில் இலங்கை 12 பதக்கங்களையும், இந்தியா 3 பதக்கங்களையும், சீனா ஒரு பதக்கத்தையும் வென்றது.


இலங்கையில் இருந்து கலந்து கொண்ட 12 போட்டியாளர்களும் பதக்கங்களை வென்றார்கள். குறிப்பாக ஓலிம்பியாட் போட்டியில் முதல் தடவையாக கிழக்கு மாகணத்துக்கு பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்து உள்ளார் ஜெயக்குமார் வைஷ்ணவி.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானப் பாடத் துறைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ரி. நடேசமூர்த்தி, அவர் எழுதி வெளியிட்ட விஞ்ஞானப் பாடப் புத்தகம் ஒன்றை வழங்கி வைஷ்ணவியை பாராட்டுகின்றமையைப் படத்தில் காணலாம்.

மாகாண மட்டத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் கணித பாடத்தில் திறைமைச் சித்தியையும் பெற்று ஒலிம்பியாட் போட்டிக்கும் தெரிவானார்.கிழக்கு மாகாணத்தைப் பிரதிபலிக்கும் ஒரே ஒரு போட்டியாளராக ஒலிம்பியாட் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


ஒலிம்பியாட் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் எட்டுப் பேர் சிங்கள மாணவர்கள். நால்வர் தமிழ் மாணவர்கள். மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கண்டி குருதேனிய கல்வி வளவாளர் நிலையத்தில் இவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டது.

அத்துடன் வைஷ்ணவி திருகோணமலையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பயிற்சியிலும், பட்டிருப்பு கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட பயிற்சியிலும் கலந்து கொண்டு போட்டிக்கு சுயம் தயார்ப்படுத்திக் கொண்டார்.



இவர் ஆரையம்பதி – 03, சீனித்தம்பி ஜெயக்குமார் (சிரேஸ்ட விரிவுரையாளர், தேசிய கல்விக் கல்லூரி அட்டாளைச்சேனை), சுலோசனா ஜெயக்குமார் (விஞ்ஞான பட்டதாரி ஆசிரியை, மட்/ புனித சிலியா பெண்கள் கல்லூரி) ஆகியோரின் புதல்வியாவார்.


இவர் 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகைளைப் பெற்று சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவியின் தந்தை சீனித்தம்பி ஜெயக்குமார் மகளின் சாதனைக்கு ஊக்கமளித்தவர்களுக்கும், சாதனையைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மகளை பாராட்டி, பரிசில் வழங்கி,போட்டிக்கு அனுப்பி வைத்த மட்டக்களப்பு றொட்டறிக் கழகத்தின் தலைவர் மு. கணேசராஜாவுக்கும், பயிற்சி வழங்கிய பட்டிருப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞான பாடத் துறைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.நடேசமூர்த்திக்கும், கிழக்கு மாகாண விஞ்ஞானப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். விபுலகுலதுங்கவுக்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

ரிதம்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved