குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை 34 வயதுக்கும் அதிகமான 40 தாய்மார் பெற்றுக் கொள்ள தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம சுகாதார வைத்திய காரியாலயத்தில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்தது.
எனினும், பௌத்த பிக்குகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சத்திரசிகிச்சை இடைநிறுத்தப்பட்டது. இந்த சத்திர சிகிச்சையை நிறுத்தும் போராட்டத்திற்கு பௌத்த பிக்குகள் பாடசாலை மாணவ மாணவிகளையும் இணைத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“சிங்கள இனத்தை அழிக்காதே” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனமொன்று இந்த சத்திரசிகிச்சைக்கு அனுசரணை வழங்கியிருந்தது.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !