தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அல்லது ரேகன் என்றழைக்கப்படும்
நடராசா மதீந்தரன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இரவு நேரம் நடந்த இத் துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மாவீரர் தினத்தை இதுவரை காலமும் நடத்திவந்த ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் இன்றும் இரவுவேளை அலுவலகத்தில் இருந்து வெளியேவந்து, பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்களை தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.
இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார்.
மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !