குளியபிட்டிய தள வைத்தியசாலையில் கடமை ஆற்றி வருகின்ற வைத்தியர் ஒருவரால் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வைத்தியசாலையில் சிறுமியின் தாத்தா ஒருவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவரை பார்வையிட சிறுமி வந்திருக்கின்றார்.
சிறுமியை தனி அறை ஒன்றுக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார் வைத்தியர்.
இக்கற்பழிப்பு சம்பந்தமாக சிறுமியின் தகப்பனால் குளியபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குளியபிட்டிய சட்ட வைத்திய அதிகாரியால் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !