செக்ஸ் வீடியோக்களை உடைமையில் வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டில் மூத்த பிக்கு ஒருவருக்கு எதிராக கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.
கதிர்காமத்தில் கிரிவெஹெர ரஜமகா விகாரையைச் சேர்ந்த உதித தேரர் என்பவரை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆஜராக்க வேண்டும் என்று நீதிவான் கஜன் மீகஹகே உத்தரவிட்டு உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டு உள்ள பிக்கு மிகிந்தலை, நாகதீபம், முகமாலை, வவுனியா, முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி ஆகிய இடங்களில் உள்ள விகாரைகளையும் சேர்ந்தவர்.
வெலி ஓயா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவரும், இவருடன் உடன் இருந்த இளைஞன் ஒருவரும் கடந்த 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
பிக்குவின் மடிக் கணனியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இம்மடிக் கணனியில் 450 ஆபாச புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்கள் ஆகியவற்றுடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதங்கள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மிகிந்தலை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி மீது பாலியல் குற்றங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விகாராதிபதியுடன் உதித தேரருக்கு முன்பு தொடர்புகள் இருந்து உள்ளன என்று பொலிஸார் விசாரணையில் கண்டு பிடித்து உள்ளார்கள்.
உதித தேரருடன் கூடவே இருந்த இளைஞன் மதவாச்சியைச் சேர்ந்தவர். இவர் வேலை வாய்ப்புக் கோரி பிக்குவிடம் வந்து இருக்கின்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !