Headlines News :
Pin It

Widgets

Home » , » வெள்ளவத்தை, ஜா-எல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை, ஜா-எல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் இருந்து அடையாளம் காணப்படாத இருவரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெள்ளவத்தை - தெஹிவளை காலி வீதியில் உள்ள வங்கியொன்றுக்கு அருகில் விழுந்து கிடந்த நிலையில் ஒருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று (07) மீட்கப்பட்டார்.

அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஜா-எல தடுகம பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஜா-எல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இவ்விருவரது சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலங்கள் களுபோவில மற்றும் ஜா-எல வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved