கோச்சடையான் படத்திலிருந்து என்னை நீக்க முடியாது. படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பில் இன்னும் நான்தான் இருக்கிறேன், என்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
'கோச்சடையான்' படத்திலிருந்து கேஎஸ் ரவிக்குமார் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மாதேஷ் பணிபுரிகிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அந்த செய்திகளை கே எஸ் ரவிக்குமார் மறுத்துள்ளார்.
‘மும்பையில் சஞ்சய் தத்தை வைத்து நான் இயக்கிவரும் இந்திப்படத்தில் பிசியாக இருப்பதால், நான் நீக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தாமதமாக நேற்றுதான் படித்தேன். கோச்சடையான் படத்துக்காக சவுந்தர்யாவுடன் லண்டன், கேரளாவில் நடந்த படப்பிடிப்புகளில் முழுக்க நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
எனது இந்திப் படத்தில் பிஸியாக இருப்பதால் எடிட்டிங் போன்ற போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதை நான் சவுந்தர்யாவிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஒருவேளை அதனால் மாதேஷின் உதவியை நாடியிருக்கக் கூடும். ஆகவே கே.எஸ்.ரவிக்குமாராகிய நான் தான் இப்போதும் படத்தின் மேற்பார்வை இயக்குனர். உதவி என்று வேண்டுமானால் மாதேஷின் பெயரைப் போட்டுக்கொள்ளட்டும்,' என்றார்.
சரீ... படப்பிடிப்பு முடிஞ்சதா இல்லையா... படத்தை இந்த தேதியில் கொண்டு வருகிறோம் என திரும்பத் திரும்ப தேதிகளை மாற்றிக்கொண்டிருப்பது ஏன்?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !