மின்னேரியா தேசிய
பூங்காவிற்குள் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்கள்
எதுவித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சுமார் 32 பேர் மின்னேரியா தேசிய பூங்காவில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் பெய்துவரும் கடும் மழையால் இவர்கள் பூங்காவிற்குள் சிக்குண்டிருந்ததாகவும் அவர்களை மீட்கும் பணிகள் இரவோடு இரவாக இடம்பெற்று வந்ததாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
14 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 32 பேர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினர், மீனவர்கள் இணைந்து படகின் மூலம் நேற்று இரவு குறித்த நபர்களை மீட்டுள்ளனர்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !