Headlines News :
Pin It

Widgets

Home » , » தாய்ப் பால் தானமாக வழங்கி உலக சாதனை செய்த பெண்!

தாய்ப் பால் தானமாக வழங்கி உலக சாதனை செய்த பெண்!


அமெரிக்காவில் உள்ள வடக்கு டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் 86 கேலன்கள் ( 325.54 லிட்டர்) தாய்ப் பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்துள்ளார்.

அலிசியா ரிச்மேன் என்ற 28 வயதுடைய அந்தப் பெண் க்ரன்பரி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2012ம் ஆண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட 86 கேலன் தாய்ப்பாலை வடக்கு டெக்சாஸில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக கொடுத்திருக்கிறாராம்.

அலிசியாவிற்கு 19 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு தேவையான பால் போக மீதமுள்ள பாலைத்தான் பம்ப் செய்து தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மூலம் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் அது பேருதவியாக இருந்துள்ளது. இதற்காகவே அவருடைய பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இது கடவுள் தனக்கு அளித்த வரம் என்று கூறியுள்ள அலிசியா, தாய்ப்பால் தனக்கு அதிகமாக சுரப்பதனால்தான் அது கிடைக்காத குழந்தைகளுக்கு தானமாக தரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 




Share this article :

1 comment:

  1. அலிசியா ரிச்மேன் என்கிற தாயை வணங்குவோம்.. சாதனையாக இதை நினைக்காமல் உண்மையிலேயே அந்த தாயின் கனிவான தாய்மை உள்ளத்தை வயதில் என்னை விட குறைவாக இருந்தாலும் அவர்களின் அந்த உயர்ந்த எண்ணத்திற்கு காலில் விழுந்து வணங்குகிறேன். யாருக்குமே வராது இப்பேர்பட்ட எண்ணம் முதலில். அப்படியே வந்தாலும் அதை நடைமுறை படுத்துவது என்பதும் சாத்தியமில்லா ஒன்றாகும். இவர் பல்லாண்டு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்...

    ReplyDelete

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved