எல்லோருக்கும் என் மீது பொறாமை. இதனால்தான்
வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என்று உண்மையான கோபத்துடன் கூறியுள்ளார்
பவர் ஸ்டார் என்று அவராலேயே அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் கே.எஸ்.
சீனிவாசன்.
லத்திகாவின் நாயகன்
லத்திகா என்ற படத்தில் தனது பெருத்த உடலை சற்றும் பொருட்படுத்தாமல்
நாயகனாக நடித்து அதகளம் செய்தவர்தான் சீனிவாசன். நிறையப் படங்களில் நடித்து
வருவதாக அவரே கூறி வருகிறார்.
டாக்டரின் 'ஆனந்தத் தொல்லை'!
அடிப்படையில் சீனி ஒரு டாக்டர் ஆவார். ஆனாலும் சினிமா மீது ஏகப்பட்ட ஆசை
வந்ததால் நடிகராகி விட்டார். தற்போது அவர் லேட்டஸ்டாக நடித்து வருவது
ஆனந்தத் தொல்லை... இவர் மற்றவர்களுக்குக் கொடுப்பதும் இதேதான்...!
உள்ளே ... வெளியே!
சமீபத்தில் அவரை பண மோசடி வழக்கில் தூக்கி உள்ளே போட்டு விட்டனர். சில
வார சிறைவாசத்திற்குப் பின்னர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்
சீனிவாசன். வந்த வேகத்தில் குமுறலையும் கொட்டியுள்ளார்.
நானும் வளர்கிறேனே சார்...!
சினிமாவில் நான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன். நான் பிரபலமாவது
சிலருக்கு பிடிக்கவில்லை. என் மேல் பொறாமைப்பட்டு வழக்கில் சிக்க வைத்து
விட்டனர். என் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன். கைதானதும் விடுதலையாகி
விடுவேன் என்று நம்பினேன். ஆனால் சில நாட்கள் ஜெயிலில் இருக்க நேர்ந்தது.
ஜெயில்ல நல்லா கவனிக்கிறாங்க பாஸ்!
சிறையில் கைதிகளை போலீசார் அக்கறையோடு கவனித்தனர். ஆனாலும் அங்கிருந்த நாட்கள் எனக்கு கஷ்டமாகவே இருந்தது.
'லட்டை' முடித்து விட்டேன்...
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து முடித்துவிட்டேன். என்னால்
அந்த படப்பிடிப்பு தாமதம் ஆகவில்லை. எனக்காக படக்குழுவினர் காத்திருக்கவும்
இல்லை. சந்தானம் தற்போது பிசியாக இருக்கிறார். வேறு படங்களை நடித்து
விட்டு அவர் திரும்பி வந்ததும் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்றார்
சீனிவாசன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்...!


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !