கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து வெளியிட்ட குறும்படத்தில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் இலங்கை உட்பட்ட உலக நாடுகள் எங்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லிபியாவில் அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.
உலக நாடுகள் முழுவதிலும் கடும் கொந்தளிப்பு ஏற்பட காரணமாக இருந்த குறும்படத்தை தயாரித்து இயக்கிய மார்க் பஸ்ஸல்லி யூசெப் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் 5 ஆண்டுகள் வரை உரிய அனுமதி பெறாமல் கற்பனையான பெயர்களில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
படத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்.
எகிப்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது...
பாகிஸ்தானில் எதிர்ப்புத் தெரிவிக்கையில்....
இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது...
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !