அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் 2 இந்தியப் பெண்மணிகள் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒருவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்.
ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் ஹவாலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துளசி கப்பார்டு. 31 வயதான இவர், ஈரான் போரில் பங்கேற்று போர் புரிந்தவர். இவர் தனது 21வது வயதில் ஹவாலி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, மிகவும் இளம் வயது எம்.எல்.ஏ. என்ற பெருமையுடன், சட்ட சபைக்குள் நுழைந்து சாதனை படைத்தார்.
இள வயது உறுப்பினர்
இதன்பின்னர் 23 வயதில் முதல் இளம் அதிகாரியாக தேர்ந்து எடுக்கப்பட்டு, போர் முனைக்கு அனுப்பப் பட்டார். 5 ஆண்டுகளிலேயே குவைத் ராணுவ தேசிய விருது பெற்று, அந்த விருதை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார். இப்போது 31ஆம் வயதில் எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இவரது வெற்றிக்கு, அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்து சமயத்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நூலிழை வெற்றி
இதேபோல் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு இந்தியர் டாக்டர் ஆமி பெரா (வயது 45). இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டான் லுங்கரன் என்பவரை குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இவருக்கு 50.1 சதவீதம் ஓட்டுகளும், லுங்கரனுக்கு 49.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
5 இந்தியர்கள் தோல்வி
இந்த தேர்தலில் போட்டியிட்ட மேலும் 5 இந்தியர்கள் தோல்வியை தழுவினார்கள். அவர்களில் டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனான் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜாக் ஊப்பல் ஆகியோர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள். ரிக்கி கில் என்பவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். சையத் தாஜ் பீகாரைச் சேர்ந்த சையத் சகாபுதீனின் தம்பி ஆவார். உபேந்திரா சிவுக்குலா நியூ ஜெர்சி மாகாண சட்டசபை துணை சபாநாயகர் ஆவார்.


தவறு இந்த தேர்தலில் ஜெயித்த துள்சி கப்பார்ட் என்ற பெண்மணி இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இந்தியர் அல்ல, இந்து மதத்தை சேர்ந்தவர் மாத்திரமே . சமோவா தீவுகளைச் சேர்ந்தவர். அமெரிக்கன் சமோவா, லிலோவாலா என்ற இடத்தில் பிறந்த இவர், ஹவாய், ஹொனலூலூவில் வசிக்கிறார்.
ReplyDeleteதற்போது மூன்றாவது நபராக டாக்டர் ஏமி பேரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய-அமெரிக்கர் டாக்டர் ஏமி பேரா அமெரிக்க வரலாற்றில் இதுவரை காங்கிரஸ் சபை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3-வது அமெரிக்க இந்தியர் ஆவார். .